ஃபாஸ்ட்டேக் பெயரில் பணம் திருடும் கொள்ளை கும்பல்- வாகன ஓட்டிகளே உஷார்.

சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதற்கு வழிவகைச் செய்யும் ஃபாஸ்டேக் பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ஃபாஸ்டேக்கை செயல்படுத்துவதாக கூறி வங்கி ஊழியர் போல நடித்து இளைஞரிடம் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுங்கச்சாவடிகளில் வீணாக வரிசையில் காத்திருக்கும் அவஸ்தையை குறைப்பதற்காகவும், சில்லறை பிரச்னை வராமல் தடுப்பதற்காகவும் மத்திய அரசு கொண்டு வந்த நடைமுறை தான் ஃபாஸ்ட்டேக் திட்டம்.

டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துவதற்காக இத்திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஜனவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் செல்லும் அனைத்து ரக வாகனங்களுக்கு ஃபாஸ்ட்டேக் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் இதை பின்பற்றி தான் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஃபாஸ்ட்டேக் முறையை அமல்படுத்தியதன் மூலம், சுங்கச்சாவடிகளுக்கான வருவாய் பெருகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனினும், இதை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. சுங்கச்சாவடிகளில் உள்ள ஊழியர்கள் விநோதமான முறையில் மக்களிடம் கொள்ளையடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

Popular posts
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Image