டெல்லி :
இந்தியாவில் அடுத்தமாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து சீனா, வடகொரியா, ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகள் விலகியுள்ளன. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் மார்ச் மாதம் 15ம் தேதி முதல் 26ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சர்வதேச அளவில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனை பங்கேற்க உள்ளனர்.