நாட்டின் 15வது ஆட்டோ எக்ஸ்போ இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், சீனாவின் வாகன நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தங்களுடைய இந்திய வருகையை ரத்து செய்துள்ளதாகவும், இதனால் நடப்பாண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அந்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று சீனா முழுக்க கடுமையான தாக்கங்களை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்பு உணரப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகள் கடும் பீதியில் உள்ளன.
இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கவில்லை என்பது உலக மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா வைரஸின் பரவும் தன்மையும் மிகவும் அபாயமான உள்ளது.
உலகளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய வைரஸ் அனைத்தும் கண்டுப்பிடிக்கப்பட்ட போது, ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கும் பரவக்கூடிய தன்மையை பெற்றிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவும் தன்மை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.