கர்நாடகாவில் திரையிட ரஜினிகாந்த் படத்துக்கு எதிர்ப்பு

தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் தர்பார் படத்தை மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளதால் வேறு புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.

ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட படங்களை தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் கர்நாடகாவில் திரையிட கூடாது என்று கன்னட அமைப்பு போராட்டம் நடத்தி உள்ளது.

தர்பார் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியிட உள்ளனர். தர்பார் படத்தை கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.

கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு அதிக தியேட்டர்களையும் ஒதுக்கி உள்ளனர்.

இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டம் நடப்பதால் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை திரையிட்டனர்.

Popular posts
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Image