கூந்தல் உதிராம பொலிவா இருக்கணும்.. வளர்த்தி அடர்த்தி வளர்ச்சி மூன்றுமே கொடுக்கணும். இளநரை வரக்கூடாது, இதெல்லாம் சேர்ந்த மாதிரி ஒரே எண்ணெயாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படிபட்ட எண்ணெயை தயாரிக்கலாமா
கூந்தல் பொலிவுக்கு எண்ணெய், இளநரைக்கு எண்ணெய், முடி வளர எண்ணெய் என்று எத்தனை எண்ணெய் பயன்படுத் தினாலும் திருப்தி மட்டும் இல்லையே... இப்படிதான் பல பெண்களின் மைண்ட் வாய்ஸ் புலம்பலாக வெளியே கேட்கிறது.
மார்க்கெட்டில் கிடைக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் எவ்வளவு விலையாக இருந்தாலும் பரவாயில்லை கூந்தல் வளர்ச்சியடைந்தால் போதும் என்று வாங்கி உபயோகப்படுத்தினாலும் அவை கூந்தல் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வாக இருக்குமா என்ற சந்தேகம் உண்டாகும்.
கொஞ்சம் மெனக்கெட்டால் வீட்டிலேயே இந்த ஆரோக்கியம் நிறைந்த கூந்தல் தைலத்தை தயாரிக்கலாம். எளிதாக கிடைக் கக்கூடிய பொருள்கள் தான் எல்லாமே என்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் பயன் தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சியான கண்களைப் பெற இதையெல்லாம் செய்யுங்க...
தேவையான பொருள்கள்
சுத்தமான தேங்காய் எண்ணெய் -1 லிட்டர்
கடுகு எண்ணெய்-100
நல்லெண்ணெய்-100
மஞ்சள் கரிசலாங்கண்ணி- ஒரு கைப்பிடி
மருதாணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை - இரண்டு கைப்பிடி
அரைக்கீரை,பொன்னாங்கண்ணி கீரை- சிறிதளவு
செம்பருத்தி பூ- 3
நெல்லிக்காய்- 20
ஆலவேர் பொடியாக நறுக்கியது- 1 டீஸ்பூன்
வெட்டிவேர் பொடியாக நறுக்கியது- 3 டீஸ்பூன்
சோற்றுக்கற்றாழை ஜெல்- 1 தேக்கரண்டி
வெந்தயத்தூள்,அதிமதுரத்தூள்- 4 டீஸ்பூன்
மிளகுத்தூள்- 3 டீஸ்பூன்
நீலி பிருங்காதி தைலம்
செய்முறை
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இட்டு விழுதாக மசித்துகொள்ளவும். கீரை வகைகள் அனைத்தையும் வாங்கி மண் இல்லாமல் சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துகொள்ளுங்கள். மருதாணி, கறிவேப் பிலையையும் சுத்தம் செய்து மிக்ஸியில் அரைக்கவும். இலைகளை மட்டும் சேர்க்கவும். காம்புகளை நீக்கிவிடவும்.
செம்பருத்தி இதழ்களைப் பிரித்து மிக்ஸியில் அரைக்கவும்.ஒற்றை அடுக்கு செம்பருத்தியைக் காட்டிலும் அடுக்கு செம்ப ருத்தி சிறந்த பயனைத் தரும். ஆலவேரை சிறுதுண்டுகளாக பொடியாக நறுக்கவும். மிக்ஸியில் அரைக்கும் போது இலே சாக நீர் தெளித்தால் போதுமானது. இயன்றவரை கெட்டிப்பதமாக அரைப்பது நல்லது.
மிதமான சூட்டில் இரும்பு வாணலி வைத்து எண்ணெய் வகைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக காய்ச்சி கொள் ளவும். ஒரு கொதி வந்த பிறகு அரைத்த ஒவ்வொரு கீரை விழுதையும் சேர்க்கவும். அதைத் தொடர்ந்து மருதாணி, கறிவேப் பிலை விழுது, செம்பருத்தி பூ, நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
விழுதை சேர்க்கும் போது இவற்றின் ஈரம் எண்ணெயில் தெறிக்கும் என்பதால் கவனம் தேவை. எண்ணெயில் ஈரம் முழுக்க காய்ந்து சத்தம் அடங்கியதும் கொதிக்க விட்டு கற்றாழை ஜெல் சேர்த்து மீண்டும் இறக்கும் போது பொடியாக நறுக்கிய வெட்டிவேர், ஆலவேர் வெந்தயத்தூள், அதிமதுரத்தூள், மிளகுத்தூள் சேர்த்து இறக்கி நீலி பிருங்காதி தைலம் சேர்த்து ஆற விடவும்.
இரும்பு பாத்திரத்தில் மெல்லிய வெள்ளைத்துணியில் அந்த எண்ணெயை வடிகட்டி எண்ணெய் பாத்திரத்தின் மூடியை இறுக கட்டி விடுங்கள். தினமும் அதிகாலை நேர வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து எடுங்கள். 10 நாட்கள் கழித்து இதைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்துங்கள். இந்த எண்ணெயை அப்படியே கூந்தலில் தடவாமல் சரிசமமாக தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துங்கள்.
குறிப்பு
இந்த எண்ணெய் கூந்தலின் வளர்ச்சிக்கும் பொலிவுக்கும் தேவையான அனைத்தையும் கொண்டிருக்கிறது.
கூந்தல் உதிர்வு, இளநரை பிரச்சனை, கூந்தல் அடர்த்தியின்மை, கூந்தல் போதிய வளர்ச்சியின்மை,பொலிவிழந்த வறண்ட கூந்தல் என அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உதவும்.