ஷாம்புக்கு அப்புறம் கண்டிஷனர் பயன்படுத்தறீங்களா? இனிமே ரிவர்ஸில செய்யுங்க. ஒரே நாளில் உங்க முடி பளபளன்னு மின்னும்...
கூந்தலின் உறுதி வளர்ச்சி தன்மை வலுவாக இருக்கவேண்டும் என்று பராமரிப்பவர்கள் தலைக்கு சில அடிப்படை தவறுகளை செய்துவிடுகிறார்கள். இதனால் பராமரிப்பு பலன் அளிக்காமல் போகிறது.

​தலை குளியல்

குளியலில் என்ன புதிதாக வந்துவிடப்போகிறது என்று நினைக்கிறீர்களா. ஆனால் நம் முன்னோர் கள் குளிக்கும் போது சில விஷயங்களை வரையறுத்துவைத்திருந்தார்கள்.வாரம் இரண்டு நாள் தவ றாமல் தலைக்கு குளித்தார்கள்.

ஆண்கள் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளி லும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள். இன்று பெரும்பாலும் தினமு மே தலைக்கு குளிக்கிறோம். ஆனாலும் முடி உதிர்வு பிரச்சனை கட்டுக்கடங்காமல் தான் இருக்கி றது.

​ஷாம்புவுக்கு முன்

தலைகுளியலில் கூந்தலை அலசுவதற்கு சீயக்காயைப் பயன்படுத்தும் வழக்கம் குறைந்துவிட்டது. எல்லோரும் ஷாம்புவை தான் பயன்படுத்துகிறோம். சிலர் கூந்தலை அவிழ்த்து நேரடியாக குளியல றைக்கு சென்று தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு ஷாம்புவை வழக்கம் போல் நேரடியாக கூந்தலில் பயன்படுத்துவார்கள். அதன் பிறகு முடி பளபளப்பாக இருக்க கண்டிஷனர் பயன்படுத்து வார்கள்.

கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூற்றுப்படி இயற்கை கண்டிஷனர்களையே கூந்தல் பொலிவுக்கும் பளபளப்புக்கும் பயன்படுத்தலாம். ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு முன்பு பழங்கால முறைப் படி சுத்தமான தேங்காயெண்ணெயை தலையில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்ய வேண்டும். பிற கு பத்து நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இது நமது முன்னோர்கள் கடைப்பிடித்த வழி.

அவர்கள் எண்ணெய் குளியல் இல்லாத தினத்தில் உச்சந் தலையில் இலேசாக எண்ணெய் வைத்து தேய்த்து குளிப்பார்கள். இவற்றைக் கடைப்பிடிப்பதுதான் கூந்தலின் வலுவுக்கு சிறந்த வழி என்கி றார்கள் தற்போதைய கூந்தல் நிபுணர்கள்.

​​கூந்தலுக்கு கண்டிஷனர்

ஷாம்பு பயன்பாட்டுக்கு பிறகு கண்டிஷனர் பயன்படுத்துகிறார்கள் இன்றைய தலைமுறையினர் கள். ஆனால் அதையே கூந்தலை அலசுவதற்கு முன்பு பயன்படுத்துவது மேலும் சிறந்த பலனைத் தரும்.

தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று ஏதேனும் ஒன்றை பயன் படு த்தி அதையே கண்டிஷராக்கி தலையில் முதலில் தேய்க்கலாம். எண்ணெய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கற்றாழை மடலை வெட்டி அதிலிருக்கும் ஜெல்லை தலையில் தேய்த்து ஊறவைக்க லாம். இயற்கை அளிக்கும் சிறந்த கண்டிஷனர் இது என்றே சொல்லலாம். இதற்கு பிறகு இருபது நிமி டங்கள் கழித்து தலைக்கு குளிக்கலாம்.

தலைக்கு குளிப்பதற்கு முன்பு கூந்தலை ஈரப்பதமாக வேர்க்கால்களுக்கு உயிரூட்டம் கொடுப்பதால் முடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும். பளபளப்பு வேகமாக கூடும். ஒரு முறை இப்படி குளித்த உட னேயே கூந்தலின் மினுமினுப்பை நீங்களே உணரமுடியும்.

Popular posts
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Image