மீண்டும் ஒரு மொழிப் போர்: அமைச்சர் பரபரப்பு பேட்டி!

"மீண்டும் ஒரு மொழிப் போர் நடக்க உள்ளது,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் 'மாபா' பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ் இணையக் கழகத்தின் விழா இன்று (20ம் தேதி) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் 'மாபா பாண்டியராஜன் உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கெத்து, வச்சு செய்வேன் என்னும் சொற்கள், சிலப்பதிகாரத்தில் இருந்தவை. அவற்றை இளை ஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்துகின்றனர். உலகத்தில், 7,500 மொழிகள் உள்ளன. அவற்றில், 101 மொழிகள் மட்டுமெ இணைய யுகத்தில் உள்ளன. ஒரு மனிதனின் தகவல் தொடர்பு, நூற்றுக்கு 80 சத வீதம் ஸ்மார்ட் போன் மூலமாகவே நடைபெறுகிறது. அல்லது இணைய வழியாக நிகழ்கிறது. இந்த 80 சத வீதத்தில், 101 மொழி கள் மட்டுமே வருகின்றன. இதில் ஆங்கிலம் மட்டுமே 54 சதவீதத்தை எடுத்துக்கொண்டு விட்டது. இந்தி யாவில் 45 சத வீதம் பேசப்படும் இந்தி மொழி கூட, இணையத்தில் குறைவாகவே பயபடுத்தப் படுகிறது. 0.1 சத வீதம் என்ற அளவில் தான் இணைய இந்தி பயன்பாடு உள்ளது. இதனால் தமிழ் மொழியை இணையத்துக்குள் எடுத்துச்செல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ் இணையக் கழகத்தைத் தொடங்கினார். உயர் கல்வித்துறை யின் உதவியுடன் இதில் மாண வர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மீண்டும் ஒரு மொழிப் போர் நடக்க உள்ளது. ஆனால் இந்த போர் எந்த மொழி யையும் எதிர்த்து நடைபெறாது,'' என்றார்.

Popular posts
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Image